Posted by in Latest News
எதிர்வரும் காலத்தில் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் காற்று வலு பூங்கா அமைக்க திட்டம்.
முழு உலகிலும் எதிர்கால மின்சக்தி தங்கி இருப்பது மீள் புத்தாக்க மின்சக்தியின் கீழ் என்பதை மின்சக்தி தொடர்பான அறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போசில எரிபொருள் மற்றும் நிலக்கரி போன்றவை இன்னும் 4 தசம ஆண்டுகளில் நிறைவடைந்து விடும் நிலைமை காணப்படுவதாக இவ்வறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிலைமையில் இருந்து மீள வேண்டுமாயின் காணப்படும் ஒரே பதிலீடு சுத்தமான பசுமையான காற்று வலுவின் உதவியை நாடுவதாகும். எதிர்கால இலங்கையின் மின்சக்தி கொள்கைஇ அதன் மீதான நம்பிக்கையில் திட்டமிடப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் காற்று வலுவின் உதவியில் 400 மெகா வோட் திறன் உற்பத்தி செய்யவூம், அக்காலப் பகுதியினுள் 20% இற்கும் அதிகமான சம்பிரதாயமற்ற மீள் புத்தாக்க வளங்களான காற்று, சூரிய வலு, சிறிய நீர் மின் போன்ற இயற்கை கொடையின் உதவியால் மின் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதற்காக மஹிந்த சிந்தனையின் முன்னெடுப்பில் விஷேட திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது.
இன்று (09) காலை புத்தளம் மாவட்டத்தில் சேதபாலஇ தலுவ மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 மெகா வோட் திறனுள்ள காற்று வலு சக்தி 03 தேசிய மின் சக்தி முறைமக்கு இணைக்கப்பட்டது. 03 வருடங்களின் பின்னர் தேசிய மின்சக்தி முறைமை சுத்தமான பசுமையான 30 மெகா வோட் திறனை இணைத்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் ஊடாக காற்று வலு 66 மெகா வோட் வரையில் அபிவிருத்தி அடைந்து உள்ளது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் ரணவக்க அவர்கள்.,
நிகழ்காலத்தில் மின்சக்தி துறையில் சில சிக்கல்கள் காணப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இதுவரையிலும் சில தீர்மானங்களுக்கு முன் வந்து உள்ளோம். மின்சார துண்டிப்பை தவிர்த்து மின்சாரத்தை பெற்று கொள்ள வேண்டுமாயின் மக்கள் இதில் பாரிய கவனம் செலுத்த வேண்டும். உறுதியாக மின்சக்தி பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பது தான் மக்களால் அதற்காக செய்யக் கூடிய அர்ப்பணிப்பாகும். அதன் ஊடாக மின்சார துண்டிப்பை தவிர்த்து மின்சார விநியோகத்தை பெற்று கொள்ள முடியூம். அதே போல இன்னும் 20 வருடங்களில் நிலக்கரி முற்று பெறும். இந்த நிலையில் நாம் பாரம்பரிய வளங்களில் தங்கி வாழும் காலம் எழுந்துள்ளது. இறந்த காலத்திற்கு உரித்தான மின் நிலையமும் எதிர்காலத்திற்கு உரித்தான மின் நிலையமும் இதே போல ஒரே பிரதேசத்தில் நிர்மாணித்தல் வரப்பிரசாதம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
இன்று முறைமக்கு இணைக்கப்பட்ட காற்று வலு 03 இன் உதவியில் வருடத்திற்கு 90 கஜகாதக வோட் மணித்தியார மின்திறன் தேசிய மின்சக்தி முறைமைக்கு இணைக்கப்பட்டது. இந்த 03 திட்டங்களுக்காக ரூ.7200 மில்லியன் தொகை தேசிய முதலீட்டாளர்களால் முதலிடப்பட்டுள்ளது. மேலும் விஷேட அம்சமானது இந்த மின் நிலையம் தொடர்பாக தொழினுட்ப மற்றும் நிர்மாண பங்களிப்பு பெற்று கொடுக்கப்பட்டது தேசிய பொறியியலாளர்களாகும். இந்த திட்டத்திற்காக பொருததப்பட்டுள்ள காற்று வலு மின் உற்பத்தி பொறி இது வரையில் உலகில் காணப்படும் நவீன தொழினுட்பத்துடன் கூடியது என இத்திட்டத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பார் திரு. மஞ்சுல பெரேரா குறிப்பிட்டார்.
நிர்மலபுர கடற் பிரதேசத்தை அண்டி 03 கி.மீ தூரத்தில் காணப்படும் நிர்மலபுர வின்ட் பவர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்று வலு கம்பங்கள் 08 ஆகும். டேலி லய்ப் ரினிவ்வபல் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 10 மெகா வோட் உடனான திட்ட மின் உற்பத்தி கம்பங்கள் 08 ஆகும். அந்த காற்று மின் சக்தி பூங்காவில் இது வரையில் பொருத்தப்பட்டுள்ள பாரிய மின்சார உற்பத்தி பொறி காணப்படுகின்றது. அவற்றின் அயரம் 85 மீட்டர் ஆவதுடன் விட்டம் 82 மீட்டர் ஆகும். பவர்ஜென் லங்கா தனியார் நிறுவனம் ரூ.2400 மில்லியன் முதலிட்டு நிர்மாணிக்கப்பட்ட மின்சக்தி முறைமையின் உற்பத்தி கம்பங்கள் 07 காணப்படுகின்றது.
இந்த நிகழ்வில் கற்பிட்டி தொகுதி உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் என்டனி, ஹேலிஸ் நிறுவன தலைவர் திரு.மொஹான் பண்டிதடீக,ரீஜன் பவர்டேக் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் மதுசூதன் கேம் கா,இ.மி.ச பிரதி தலைவர் திரு. அனுல விஜேபால ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட இ.மி.ச சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |