கேகாலை மாவட்டத்தில் மூன்று மின்திட்டங்கள் திறந்து வைப்பு
07 0

Posted by  in Latest News

கேகாலை மாவட்டத்தில் 564 குடும்பங்களுக்காக ரூ.210 மில்லியன் தொகை செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய மின்சார திட்டங்கள் 03 கையளித்தது அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

கேகாலை மாவட்டத்தில் கேகாலைஇ வரகாப்பொலஇ மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேசங்களில் 564 குடும்பங்களுக்காக ரூ.210 மில்லியன் தொகை செலவில் இலங்கை மின்சார சபையின் கிராமிய மின்சார திட்ட அபிவிருத்தியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய மின்சார திட்டங்கள் 03இ இன்று (07) விடய பொறுப்பு கௌரவ அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தலைமைகள் திறந்து வைக்கப்பட்டது.

400 குடும்பங்களின் நலனை கருதி ரூ. 38 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கேகாலை கலங்நாயக்க ஸ்ரீ சரணபால மாவத்தை மின்சார திட்டம் திறந்து வைத்தல் இன்று காலை இடம் பெற்றது. இதற்காக தேசிய உரிமைகள் தொடர்பான கௌரவ அமைச்சர் ஜகத்பால சூரிய அவர்கள் கலந்து கொண்டார்.

இங்கு தனது கருத்தை வெளியிட்ட கௌரவ அமைச்சர் சம்பிக்க அவர்கள்………

இன்றைய சமூகத்தில் கலங்கலான கடலில் மீன் பிடிக்கும் மக்களை பெரும்பாலும் காணக் கூடியதாக உள்ளது. மின்சார துறையில் இத்துறை மக்கள் சுலபமாக இனம் காண முடியூம். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தரம் குறைந்த எரிபொருளை மின்சக்தி நிலையங்களுக்கு விற்று, அதிகபட்ச இலாபம் உழைக்கும் சதிகாரர்கள் பலர் இந்நாட்டில் உள்ளார்கள். இவற்றில் மக்களின் உரிமையான மின்சாரத்தை பிணையாக பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முற்படுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில் மக்களின் மின்சார உரிமையை உறுதிப்படுத்த நாம் எப்போதும் முன்வருகின்றௌம். மின்சார உரிமையை வெற்றி கொள்ள இந் நாட்டின் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அந்த உரிமைக்காக முன்வர வேண்டும். இந்நாட்களில் உயர்தர மாணவர்களின் பரிட்சை நடைபெறும் காலப் பகுதியில்இ தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் சிலருக்கு தமது உரிமை நினைவூக்கு வந்துள்ளது. இவை அனைத்துக்கும் பின்னால் காணப்படுவது தனிப்பட்ட ரீதியான நிகழ்ச்சி திட்டம் அல்லது மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி திட்டமாகும். இந் நிலையில் மக்களை புரிந்த கொண்டு நடவடிக்கை  எடுத்தால்இ நாம் மின்சக்தி துறையில் செல்லும் பயணத்தை வெற்றி கொள்ள முடியூம். அதற்காக உங்கள் உரிமைக்காக நாட்டிற்காக மின்சக்தியை வெற்றி கொள்ள முன்வர வேண்டும் என நாம் அனைவரிடமும் கேட்டு கொள்கின்றௌம்.

இதனை தொடர்ந்து ரூ. 60 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வரகாப்பொலஇ தொரவக்கஇ குரவல பிரதேசத்தில் மின்சார திட்டம் திறந்து வைத்தல் இடம் பெற்றது. அதன் மூலம் 36 குடும்பங்களுக்கு புதிய மின்சாரம் கிடைக்க பெற்றது. மாலை 5.30 மணியளவில் யட்டியாந்தோட்டை வீ ஓயா பிரதேசத்தில் மின்சக்தி திட்டமானது மக்களுக்கு கையளிக்கும் வைபவம் இடம் பெற்றது. அதன் மூலம் பலன் பெறும் குடும்பங்கள் 128 ஆகும். அத்திட்டத்தறிகாக இ.மி.ச ரூ.121 மில்லியன் தொகையை செலவிட்டது.

கேகாலை சுற்று பயணத்தில் அமைச்சர் அவர்கள் கரவனெல்ல நுகர்வோர் மத்திய நிலையத்தை பார்வையிட  கலந்து கொண்டார். அம் மத்திய நிலையம் 5எஸ் முறையில் செயற்பட்டு வருகின்றது.

Leave a comment

* required