Posted by in Latest News
நாட்டின் நிலை மற்றும் காலநிநை பாதிப்புக்கள் காரணமாக இது வரையிலும் முழு நாட்டிலும் முகங் கொடுத்துள்ள மின்சக்தி நெருக்கடியை வெற்றி கொள்ள, மக்களை மின் சக்தி பாதுகாப்பு தொடர்பாக இணைக்க மின்சக்திபாதுகாப்பு பாத யாத்திரை நேற்று கௌரவ மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற அமைச்சர்கள் பங்களிப்புடன் இடம் பெற்றது.
எதிர்பார்க்கப்பட்ட மொன்சூன் பருவ பெயர்ச்சி மழை காணப்படாததால் நீர் மின் உற்பத்தி மிகவும் சீரற்றதாக குறைந்துள்ளது. அதன் காரணமாக அனல் மின் அதிகமாகபாவிக்கப்படுகின்றது. இந் நிலைமையில் மின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்துவது தேசிய ரீதியான கடமை ஆகும். எதிர் காலத்தில் முழு நாட்டிலும் ஏற்படக் கூடிய மின்சக்தி தட்டுபாட்டை சரியான முறையில் கையாண்டு அது தொடர்பாக முகங் கொடுக்கப்பட்ட கூடியவாறு செயற்படுத்த வெவ்வேறு வேலைதிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் விஷேட பாகமாக சகல பிரிவினரையும்ஒன்றிணைத்து இந்த மின்சக்தி பாதுகாப்பு பாத யாத்திரை ஒழுங்குபடுத்தப்பட்டது.
ஒன்றிணைவோம்…………… எழுந்திடுவோம்……………… மின்சக்தி பாதுகாப்பான எதிர்காலத்திற்குள் நுழைவோம்….. எனும் பதத்தை முன்னெடுத்துஇ வைத்திய, மதகுருமார், ஆசிரிய, விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற ஐம் பிரிவு மக்களை ஒன்றிணைத்து இடம் பெற்றஇந்தபாத யாத்திரை காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்ட்டு லேக் ஹவுஸ் சுற்று வட்டாரம் ஊடாக இ.மி.ச தலைமை அலுவலக முன்னால் விஹார மஹா தேவி பூங்கா வரையில் பயணம் செய்யப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |