குறிக்கோள்கள்

  • வலுசக்தி விடயங்களுடனும்; மற்றும் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்ட தேசிய கொள்கைகளின்  அடிப்படையில் நிரல்II இல் தரப்பட்டுள்ள திணைக்களங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற அந்த விடயங்களுடனும் தொடர்புபட்ட கொள்கைகளையும்  நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும்      வகுத்தமைத்தலும்,   செயற்படுத்துதலும்,  கண்காணித்தலும் மற்றும் மதிப்பிடுதலும்.
  • அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற உரிய பொதுச் சேவைகளை வினைத்திறனுடனும் மனிதநேயரீதியிலும் வழங்குதல்.
  • ஊழலும், வீண்விரயமும்; இல்லாதொழிக்கப் படுகின்ற அதேவேளை,  அமைச்சின் பணிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தி,  நவீன  முகாமைத்துவ    நுணுக்கங்களையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி அனைத்து முறைமை களையும்      நடைமுறைகளையும் மறுசீரமைத்தல்.
  • சூரிய, நீர், அனல், நிலக்கரி, கழிவுப்பொருட்கள் மற்றும் காற்று ஆகிய மூலவளங்களின் மூலம் மின்சக்தியையும், ஏனைய எரிசக்தியையும் உற்பத்தி செய்தல்  தொடர்பான    செயற்பாடுகளை நுண்ணாய்வு செய்தல்; திட்டமிடுதல், விருத்திசெய்தல் மற்றும் மேற்பார்வையிடுதல்.
  • இலங்கையின் மின்சாரத் தேவையை  நிவர்த்திசெய்தல் மற்றும் வலுசக்தியின் பாதுகாப்பு.
  • வலுசக்தியை வினைத்திறனாக்கும் வகையில் ஏற்படும் கேள்விகளை முகாமைத்துவம் செய்தல்.
  • நீண்டகாலத் தேவையினை அடிப்படையாகக்கொண்ட புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.
  • மின் சேகரிப்பு மற்றும் விநியோகிக்கும் செயற்பாட்டினை வினைத்திறனாக்குதல்.
  • உற்பத்தி செய்யப்பட்ட மின்சக்தியை உச்சளவிலான வினைத்திறனுடனான பயன்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக நேர்த்தியான வலையமைப்பொன்றை நிருமாணித்தல்.
  • மின் உற்பத்திக்காக செலவிடப்படும் செலவினைக் குறைத்தல் மற்றும்; உற்பத்தியின்போது ஏற்படும்  நிச்சயமற்ற தன்மையை அகற்றுதல்.
  • தற்போதுள்ள செலவு கூடிய மின் உற்பத்தி மூலங்களை குறைந்த செலவு, சூழலுக்கு அனுசரணையான மீள்புதுப்பிக்கத்தக்க மூலங்களுடன் பதிலிடுவதற்கு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  • தேசிய மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்காக உள்நாட்டு கம்பனிகளுக்கு சமவாய்புக்கள் கிடைப்பதை உறுதிசெய்தல்.
  • கைத்தொழில் கழிவுகளைப் பயன்படுத்தி வலுசக்தி உற்பத்தியை அதிகரித்தல்.
  • கூட்டுறவு தத்துவங்களின் அடிப்படையில் வலுசக்தி அலகுகளாக நுண்வலையமைப்பு களை தாபித்தல்.
  • வலுசக்தி துறையின் உபாயவழிமுறை கூட்டாண்மை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தல்.
  • விசேடமாக காணப்படும் ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதன் மூலம் சிறிய அளவு நீர்மின் உற்பத்திக்கான மீள் முதலீட்டை    ஊக்குவித்தல்.
  • மின்சாரக் கட்டணத்தை இற்றைப்படுத்து வதற்காக நியாயமான வெளிப்படைத் தன்மையான முறையினை அறிமுகம் செய்தல், மற்றும் பெற்றோலியம், எரிவாயு  தொடர்பில் விலை சூத்திரத்தை  பிரயோகித்தல்;
  • நீண்டகாலத் தேவையினை அடிப்படையாகக்கொண்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்.
  • நிறுவனம் சார் முகாமைத்துவ மட்டத்தில் ஏற்படும் நட்டங்கள் மற்றும் மின்பிறப்பாக்கி, விநியோக முறைமைக்கு ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான பாதிப்புகளை குறைப்பதற்குத் தேவையான  நடவடிக்கை   எடுத்தல்.
  • மின்சார வாகனப் பாவனைக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல்.
  • இலங்கையை வலுசக்தி மத்திய நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
  • பச்சைவீட்டு வாயு வெளியேற்றுதலைக் கட்டுப்படுத்தல்.
  • கிராமிய மின்வலுப்படுத்துகை.
  • பெற்றோலியம்சார்ந்த உற்பத்திகள், இயற்கை வாயு  என்பனவற்றின் இறக்குமதி, சுத்திகரிப்பு, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை.
  • பெற்றோலிய உற்பத்தியும்; சுத்திகரிப்புத் தொடர்பான பணிகளும்.
  • பெற்றோலிய வளம் மற்றும் இயற்கைவாயு ஆய்வும் அதுசார்ந்த விடயங்களும்.
  • பெற்றோலிய உற்பத்திகள் முதலிய வளமூலங்களிலிருந்து எரிவாயு மற்றும் இடை உற்பத்தி நடவடிக்கைகள், மொத்த வைப்பு, உற்பத்தி மற்றும் விநியோகம்.
  • எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் சார்ந்த உட்கட்டமைப்பு  வசதிகளின் அபிவிருத்தி.
  • வலுசக்தி வளமூலங்களின் கட்டுப்பாடு, ஒழுங்குறுத்துகை, பயன்பாடு ஆகியவற்றுக்குத் தகுந்த மின்வலுக் கொள்கையொன்றை வகுத்தமைத்தல்.
  • எண்ணெய் சுத்திகரிக்கும் இயலளவை  செம்மைப்படுத்தல் மற்றும் பெற்றோலியம் சார்ந்த உற்பத்திக்  கைத்தொழிலை ஊக்கவித்தல்.
  • எரிபொருள் விநியோகத்தின் நம்பகத் தன்மை மற்றும் செயற்திறனை செம் மைப்படுத்தல்.
  • II ஆம் நிரலில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்களின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற  ஏனைய அனைத்து விடயங்கள்.
  • II ஆம் நிரலில் காட்டப்பட்டுள்ள எல்லா நிறுவனங்களையும் மேற்பார்வையிடுதல்.

 


பிரதான நிறுவனங்கள்


  • இலங்கை மின்சார சபையும் அதன்துணைக் கம்பனிகளும்
  • இலங்கை மின்சாரக் கம்பனி
  • வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) கம்பனி
  • வரையறுக்கப்பட்ட எல்ரீஎல் ஹோல்டிங் (தனியார்) கம்பனி
  • இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
  • வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றோலியக் களஞ்சியத் தொகுதி
  • இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை
  • வரையறுக்கப்பட்ட பொலிப்ரோ லங்கா (தனியார்) கம்பனி
  • இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை
  • இலங்கை அணுசக்தி சபை
  • இலங்கை அணுசக்தி ஒழுங்குறுத்துகைச் சபை

அமைச்சின் பிரிவுகள்


  • நிர்வாகப் பிரிவு
  • அபிவிருத்திப் பிரிவு
  • கொள்கை, தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி பிரிவு
  • உற்பத்தி, பரிமாற்றல் மற்றும் விநியோக பிரிவு
  • திட்டமிடல் பிரிவு
  • பெறுகைப் பிரிவு
  • நிதிப் பிரிவு
  • உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு