ddd
?>

மன்னார் காற்றாலை மின்சக்திப் பூங்கா (300 மெவோ)

இலங்கையின் முதலாவது பெரிய அளவிலான காற்றாலைப் பண்ணை மன்னார் தீவின் தெற்குக் கரையில் அமைந்துள்ள மன்னார் காற்றாலைப் மின்வலுப் பண்ணையாகும். முதலாவது படியாக, 100 மெ வோ காற்றாலை மின்சக்தி அபிவிருத்தி செய்யப்படும். இக்கருத்திட்டமானது, நவீன 30 காற்றாலை விசையாழிகளை உள்ளடக்கியுள்ளதோடு, ஒவ்வொன்றும் 3.45 மெவோ என மதிப்பிடப்பட்டுள்ளதோடு. பொருத்தப்பட்ட காற்றாலைப் பண்ணையின் மொத்த கொள்திறன் 103.5 மெவோ ஆகும். இக்கருத்திட்டமானது இலங்கையின் பிரதான மேற்காவுகை காற்று முறைமைகளை பயன்படுத்துவதற்கே நிர்மாணிக்கப்பட்டது. வருடாந்தம் 400 கி.வோ.ம மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவான ஐஅடொ 200 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து ஒரு கடன் மூலம் பூர்த்திசெய்யப்படும். இக்கருத்திட்டம் 2019 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முதலாவது கட்டமானது 08 டிசம்பர் 2020 அன்று “தம்பபவனி” எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டதுடன் 30 மெ.வோ. தேசிய மின் கட்டத்தில் இணைக்கப்பட்டது. எஞசியுள்ள திறனானது நடுகுடா மின்தொகுப்பு உப நிலைய நிறைவினை தொடர்ந்து 2021 மே மாதம் இணைக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன்; சேமிப்புக்கள் அதே இடத்தில் 20 மெவோ மேலதிக காற்றாலை மின்சக்தியை ஸ்தாபிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.

இந்த காற்றாலை மின்சக்திப் பண்ணையின் இரண்டாம் கட்டமாக மேலதிகமாக 200 மெ.வோ. கொள்திறனை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மன்னாரில் இனங்கண்டுள்ள காணிகளை அளவை செய்ய ஆரம்பித்துள்ளது இக்கருத்திட்டத்தின் சாத்திய வளஆய்வினை மேற்கொள்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைளும் மெற்கொள்ளப்பட்டன.